Connect with us

அண்ணா பல்கலைக்கழகத்தை உடனே ஒப்படையுங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் கடிதத்தால் பரப்பரப்பு

செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தை உடனே ஒப்படையுங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் கடிதத்தால் பரப்பரப்பு

சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் தனிமைப்படுத்துதல் முகாம்கள் அமைக்க பல கட்டடங்கள் தற்போது உபயோகப்படுத்தப் பட்டு வருகின்றன

தனியார் கல்லூரிகள் மற்றும் அரசு கல்லூரிகள் உள்பட பல கட்டிடங்கள் தற்போது தனிமைப்படுத்தல் முகாமாக மாறி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாணவர் விடுதியும் தனிமைப்படுத்துதல் முகாமாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது

இதனை அடுத்து அண்ணா பல்கலைக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் வரும் 20-ஆம் தேதிக்குள் அண்ணா பல்கலைக்கழக மாணவர் விடுதியை சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர் விடுதியை விரைவில் ஒப்படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
To Top