ஒரே நேரத்தில் கமல்-ரஜினி படங்களுக்கு இசையமைக்கும் அனிருத்

விஜய், அஜித், சூர்யா உள்பட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்துவிட்ட அனிருத், எப்போது கமல், ரஜினி படங்களுக்கு இசையமைப்பார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்த நிலையில் தற்போது அவர் ஒரே நேரத்தில் கமல், ரஜினி படங்களுக்கு இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள ‘இந்தியன் 2’ படத்திற்கு இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடந்து அது கிட்டத்தட்ட உறுதியாகும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த இரண்டு தகவல்களும் உறுதி செய்யப்பட்டால் கோலிவுட் திரையுலகில் அனிருத்தின் மார்க்கெட் உச்சத்திற்கு செல்லும் என்று கூறப்படுகிறது.