Connect with us

நயன்தாரா படம் என்றாலே ஜாலிதான்: அனிருத்

பொழுதுபோக்கு

நயன்தாரா படம் என்றாலே ஜாலிதான்: அனிருத்

நடிகை நயன்தாரா நடித்து வரும் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்திற்கு இசையமைத்து வரும் அனிருத், அந்த படத்திற்கு இசையமைத்த அனுபவம் குறித்து தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா படத்திற்கு இசையமைப்பது என்றாலே ஒரு ஜாலிதான் என்றும், இந்த படத்திற்காக 5 பாடல்களுக்கு இசையமைத்து விட்டதாகவும், மீதமுள்ள ஒர் பாடலுக்கு இசையமைத்து வருவதாகவும் இந்த படத்திற்கு மிகவும் என்ஜாய்யுடன் பணி செய்வதாகவும், மே மாதம் ஒரு பாடலை வெளியிட இருப்பதாகவும் அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

நெல்சன் இயக்கி வரும் இந்த படத்தில் நயன்தாரா, ஜாக்குலின், சரண்யா, யோகிபாபு, நிஷா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை லைகா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவும், நிர்மல் படத்தொகுப்பு பணியும் செய்து வரும் இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top