தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் அனிமேஷன் வேலை

மாநில அரசின்  தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் (TNSCB)  காலியாக உள்ள  அனிமேஷன் (Animation) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தில் அனிமேஷன் வேலை

காலிப்  பணியிடங்கள் :

அனிமேஷன் (Animation)  பிரிவில் 08  பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பிளஸ்டூ படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ. 11,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://www.tnscb.org  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.tnscb.org/recruitment/ என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.அஞ்சல் முகவரி The Managing Director, Tamil Nadu Slum Clearance Board, No.5, Kamarajar Salai, Chepauk, Chennai – 600005.

      விண்ணப்பிக்க கடைசி தேதி : 10-07-2019