அனைத்து வயதினரும் விரும்பும் வெஜ் புலாவ்..


சாம்பார், காரக்குழம்பு, பொரியல், அவியல் என பாரம்பரிய உணவுகள் பலருக்கும் அலுத்து போனது மட்டுமில்ல. சமைக்கவும், சாப்பிடவும் நேரமில்லாத காலக்கட்டமிது. அதனால், எதாவது கதம்ப சாதத்தினை சட்டுன்னு செய்து அலுவல்களுக்கும், பள்ளிகளுக்கும் கொடுத்து அனுப்ப ஆரம்பித்து விட்டார்கள். சட்டுன்னும் ருசியாகவும் செய்யப்படும் புலாவ் வகை உணவுகள் எல்லா வயதினருக்கும் பிடிக்கும். காய்கறிகளை சேர்க்கும் அது ஆரொக்கியமானதாகவும் மாறிவிடுகின்றது.

எல்லாருக்கும் பிடித்த ஆரொக்கியமான வெஜ் புலாவ் செய்வது எப்படின்னு பார்க்கலாம்…

e248a09d465b34ffecbeb3d6099db0a1

தேவையான பொருட்கள்..

பாஸ்மதி அரிசி – அரைகிலோ
எண்ணெய் – 50- மில்லி
நெய் – 50 மில்லி
இஞ்சிபூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
பட்டை – 2 சிறியதுண்டு
பிரியாணி இலை -1
புளிக்காத மோர் – ஒரு கப்
வெங்காயம் – 1
தக்காளி – சிறியது-1
மிளகாய் -2
கேரட்,உருளை,பீன்ஸ்,பச்சை பட்டாணி – சேர்ந்து கால் கிலோ
மல்லி புதினா – சிறிது
உப்பு – தேவைக்கு

செய்முறை :
முதலில்  காய்கறிகளை அலசி பொடியாக நறுக்கி வைக்கவும்,அரிசியை அலசி குறைந்தது அரைமணி நேரம் ஊறவைக்கவும். புலாவ் செய்யும் பாத்திரத்தில் எண்ணெய் நெய் காயவிட்டு ஏலம்,பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்க்கவும்.வெங்காயம் சிவறாமல் நன்கு வதக்கி,இஞ்சி பூண்டு தக்காளி,மிளகாய்,சிறிது மல்லி,புதினா வதக்கவும்.அடுப்பை சிம்மில் வைக்கவும்.

நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கி மூடி போட்டு வேகவிடவும்.தண்ணீர் சேர்க்க கூடாது,எண்ணெயில் விரைவில் வதங்கி வெந்து விடும்.மோர் ஒரு கப் சேர்க்கவும்,விரும்பினால் தேங்காய்ப்பால் ஒரு கப் சேர்க்கலாம்.அரிசியின் அளவிற்கு ஒன்றுக்கு ஒன்றே முக்கால் தண்ணீர் வைக்கவும். இப்படி கொதிவரும் பொழுது ஊறிய அரிசியை கொடடி கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். தீயை மிதமாக வைத்து மூடி வைக்கவும்.புலாவ் வெந்து மேல் வரும்.புலாவை பிரட்டி அடுப்பை சிம்மில் வைக்கவும்.மூடி பத்து நிமிடம் சிம்மில் வைக்கவும்.புலாவ் பாத்திரத்தை திறந்து ஒரு போல் பிரட்டி விடவும்.மோர் சேர்ப்பதால் வெள்ளையாக சஃப்டாக உதிரியாக வரும்.மோர் இல்லையெனில் தயிர் சிறிது சேர்க்கவும். சுவையான சிம்பிள் வெஜ் புலாவ் ரெடி.

தொட்டுக்கொள்ள வெங்காய பச்சடி, வெள்ளரிக்காய் பச்சடி, குருமா, உருளைக்கிழங்கு கறி, சிக்கன் கிரேவிலாம் ஏற்றது.. முந்திரியும் சேர்க்கலாம். பச்சை மக்காச்சோள முத்துக்களையும் சேர்க்கலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews