Connect with us

ஒருவழியாக முடிந்த அம்மா போயிட்டு வரேன் டாஸ்க்!!

பொழுதுபோக்கு

ஒருவழியாக முடிந்த அம்மா போயிட்டு வரேன் டாஸ்க்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி 3 வேறு லெவலாகப் போய்க் கொண்டிருக்கிறது, கவின்- லாஸ்லியா காதல், சேரன்- லாஸ்லியா உறவில் விரிசல், சாண்டியின் மழலை கெட்டப், கஸ்தூரி- வனிதாவின் சண்டை, சேரனின் தனிமை என மசாலாவாக சென்று கொண்டிருக்கிறது.

இனி டிஆர்பியை ஏத்த எதுவும் தயாரிப்புக் குழு செய்யத் தேவையில்லை, அவரவர் பங்குக்கு அவர்களே போதும் போதும் என்கிற அளவு செய்கின்றனர்.

நேற்று முன்தினம் நடந்த கிண்டர் கார்டன் டாஸ்க்கின் தொடர்ச்சியாக நேற்றும் டாஸ்க் தொடர்ந்தது. மீண்டும் பள்ளிச் சீருடைகளை அணிந்தபடி அனைவரும் குழந்தைகள்போல பாவிக்கத் தொடங்கினர்.

ஒருவழியாக முடிந்த அம்மா போயிட்டு வரேன் டாஸ்க்!!

கஸ்தூரியைத் தொடர்ந்து நேற்று மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் பாடம் எடுத்தார் சேரன். அதன்பின்னர் வாக்கியங்கள் ஒப்புவித்தல் நடைபெற்றது.

அதன் பின்னர், மாணவர்கள் அனைவரும் டாஸ்க் பற்றியதாக ஒரு பாடல் எழுதி பாட வேண்டும் என பிக்பாஸ் கூற, அதன்படி மாணவர்கள் எழுதி பாட, லாஸ்லியா, ஷெரின், வனிதா ஆகியோர் அந்தப் பாடலுக்கு குழந்தைகள் போல டான்ஸ் ஆடினர்.

இறுதியாக மழலையர் மாணவர்களும், ஆசிரியர் கஸ்தூரி, தலைமை ஆசிரியர் சேரன் ஆகியோருடன் இணைந்து பள்ளிக் கால புகைப்படம் எடுக்கவேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படியே அனைவரும் போட்டோ எடுத்து டாஸ்க்கை நிறைவு செய்தனர்.  

Continue Reading

அதிகம் படித்தவை

To Top