அமிதாப்பின் டுவிட்டர் கணக்கை முடக்கிய பாகிஸ்தானிய ஹேக்கர்ஸ்

அமிதாப் டுவிட்டரில் மிக சிறப்பாக செயல்பட்டு வருபவர். செய்திகள், தகவல்கள் சினிமா அப்டேட்ஸை உடனுக்குடன் வெளியிட்டு வருபவர். இவரின் கணக்கை சேட்டை பிடித்த பாகிஸ்தானிய ஹேக்கர்கள் அபகரித்துள்ளனர்.

அதை விட டுவிஸ்ட் என்ன என்றால் அதில் இருக்கும் அமிதாப் புகைப்படத்தை எடுத்து விட்டு அதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் படத்தை ப்ரொபைல் புகைப்படமாக வைத்துள்ளனர்.

இதை நடிகை கஸ்தூரி உள்ளிட்டோர் தங்கள் பக்கங்களில் வெளியிட்டு உள்ளனர்.