Connect with us

அமீர்கான், நஸ்ருதீன் ஷாவை எச்சரிக்கும் சிவசேனா

பொழுதுபோக்கு

அமீர்கான், நஸ்ருதீன் ஷாவை எச்சரிக்கும் சிவசேனா

நஸ்ருதீன் ஷா இந்தி சினிமாவின் மிக பிரபலமான நடிகர் பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள இவர் சர்ச்சை கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருவதால் பிரபலமடைந்து வருகிறார்.

ராஜஸ்தானில் உள்ள அஜ்மீரில் இலக்கிய விழாவை தொடங்கி வைக்க இருந்த நசுருதீன் ஷாவுக்கு எதிராக போராட்டங்களும் நடந்தன. இதனால் விழாவுக்கு வரவேண்டாம் என்று நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் அவரை தடுத்து விட்டனர்.

நஸ்ருதீன் ஷாவின் பேச்சை வைத்து இந்தியாவின் நிலைமையை பிரதமர் மோடி ஆட்சியை பற்றி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விமர்சித்ததற்கு இவர் இம்ரான்கானுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

போலீஸ் அதிகாரியின் கொலையை விட பசுக்கள் இறந்ததை முக்கியமாக பேசுகிறார்கள்” என்று உத்திரபிரதேசத்தில் நடந்த சம்பவம் குறித்து பேசினார். இதற்கு அங்குள்ள இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இப்படியாக தொடர் சர்ச்சையில் நஸ்ருதீன் ஷா சிக்கி தவிக்கிறார்.

இதற்கு பதிலளித்து பேசிய சிவசேனா அமைப்பு இவர்கள் இங்கு இருக்க விருப்பமில்லை என்றால் பாகிஸ்தான் போகட்டும் என்று கூறியுள்ளனர். இது போல கருத்துக்களை கூறி வரும் அமீர்கானையும் அவர்கள் கண்டித்து உள்ளனர்.

Continue Reading
To Top