Connect with us

சிறுவன் உயிரை காப்பாற்ற 356 கிமீ தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் சிறப்பு பேட்டி

செய்திகள்

சிறுவன் உயிரை காப்பாற்ற 356 கிமீ தூரத்தை 4 மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் சிறப்பு பேட்டி

356 கிமீ தூரத்தை 4மணி நேரத்தில் கடந்த ஆம்புலன்ஸ் டிரைவரின் சிறப்பு பேட்டி

கடந்த 2ம் தேதியன்று இராம நாதபுரம் மாவட்டம் அழகன் குளத்தை சேர்ந்த சிறுவன் ஒருவன் திடீரென பாதிக்கப்பட அவனை பரிசோதித்த இராம நாதபுரம் அரசு மருத்துவர்கள் சிறுவன் அபாய நிலையில் இருக்கிறான். முதுகுதண்டுவடத்தில் புற்று நோய் உள்ளது. ஏற்கனவே ஒரு கால் செயலிழந்துவிட்டது. இவனை காப்பாற்ற வேண்டும் என்றால் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தால்தான் காப்பாற்ற முடியும் வேறு வழியே இல்லை என கைவிரித்து விட்டனர். அதுவும் 6 மணி நேரத்துக்குள்ளாக கொண்டு செல்ல வேண்டும் என கூறி விட்டனர். முதலுதவி சிகிச்சை மட்டும் செய்து அனுப்பினர்.

இராம நாதபுரத்தில் இருந்து தொண்டி, வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், காரைக்கால், சீர்காழி, சிதம்பரம், கடலூர் பாண்டிசேரி இதுதான் செல்லும் வழி. இதில் நாம் சாதாரணமாக காரில் சென்றாலே 200 கிமீ தூரமுள்ள வேளாங்கண்ணி செல்லவே மூன்றரை மணி நேரம் ஆகி விடும். அதற்கு பின் நாகப்பட்டினம், காரைக்கால், சீர்காழி, கடலூர் பாண்டிச்சேரி செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

சாதாரணமாக இரவுப்பேருந்தில் 9மணிக்கு இயக்கப்படும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தால் காலை 4.30க்குத்தான் சிதம்பரம் செல்லும் அதற்கு பின்புதான் கடலூர் சென்று பாண்டி செல்ல முடியும்.

ஆனால் இதை கேள்விப்பட்ட இராம நாதபுரத்தை சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் இஜாஸ் என்பவர் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழக ஆம்புலன்ஸை இயக்கி கொண்டு அந்த சிறுவனை பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 4மணி நேரத்தில் சேர்த்துள்ளார். அதாவது மாலை 6.30க்கு எடுத்த ஆம்புலன்ஸ் 10.30க்கெல்லாம் பாண்டிச்சேரி சென்றுவிட்டது ஆச்சரியம்.

தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழக ஆம்புலன்ஸ் இது. அந்த அமைப்பை சார்ந்த தன்னார்வலர்கள் வழியெங்கும் போக்குவரத்தை க்ளியர் செய்து வைத்திருந்தனர் இருந்தாலும் 4மணி நேரத்தில் விரைவாக பாண்டிச்சேரி சென்றது சாதனைதான்.

அவரின் முழு பேட்டி இந்த லிங்க்கில்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top