Connect with us

நடிகை அமலாபால் தொடங்கிய தொண்டு நிறுவனம்

பொழுதுபோக்கு

நடிகை அமலாபால் தொடங்கிய தொண்டு நிறுவனம்

பிரபல நடிகை அமலாபால் முன்னணி நடிகை மட்டுமின்றி சர்ச்சைகளுக்கும் பெயர் போனவர். ஆடம்பர கார் வாங்கியது வரி மோசடி, தொழிலதிபரின் பாலியல் தொல்லை போன்றவைகளால் கடந்த சில நாட்களாக தலைப்பு செய்திகளில் இடம்பெற்ற அமலாபால், சமீபத்தில் கண்தானம் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த நிலையில் தான் கண்தானம் செய்தது மட்டுமின்றி இதுகுறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது ‘அமலா ஹோம்” என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதுகுறித்து அமலாபால் கூறியதாவது:

அகர்வால் கண் மருத்துவமனைக்காக நான் ஒரு மேடை பேச்சுக்கு தயார் செய்து கொண்டிருந்தபொழுதுதான் சில முக்கியமான புள்ளிவிவரங்களை நான் கவனித்தேன். உலகம் முழுவதும் 30 மில்லியன் மக்கள் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள். மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால் இதில் 70 சதவிகிதம் Cornes Transplant மற்றும் Cataract போன்ற அறுவை சிகிச்சைகளால் குணப்படுத்தப்படக்கூடியவை. இதற்கு பெரும் தடையாக இருக்கும் முக்கியமான விஷயம் போதிய கண் தானம் இல்லாதது தான். தற்பொழுதுள்ள நிலையில் வருடத்திற்கு வெறும் 40000 கண் சிகிச்சைகள் மட்டுமே பண்ணக்கூடிய அளவில் கண் தானம் நடக்கின்றது.

நான் எனது கண்களை தானம் செய்வது மட்டுமில்லாமல் இந்த கண் தான பற்றாக்குறையை நீக்க,இந்த அறுவை சிகிச்சைகளுக்கு நிதி திரட்ட ‘அமலா ஹோம்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கியுள்ளேன். நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் அனைவருக்கும் கண் பார்வை கிடைக்கும் படி செய்து நமது அழகான, மிக வேகமாக வளர்ந்து வரும் நமது தேசத்தை அவர்களையும் காண வைக்கலாம்

Continue Reading

அதிகம் படித்தவை

To Top