Connect with us

நீண்ட இடைவேளைக்கு பிறகு கலக்கும் அமலா

பொழுதுபோக்கு

நீண்ட இடைவேளைக்கு பிறகு கலக்கும் அமலா

ஒரு காலத்தில் வளையோசை கல கல என்ற பாடலில் கமலுடன் ரொமாண்டிக்காக நடித்து , வேலைக்காரன் படத்தின் வா வா கண்ணா வா என்ற பாடலில் அழகாக தோன்றி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இன்று வரை சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் அமலா.

மைதிலி என்னை காதலி படம் மூலம் டி.ராஜேந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் அமலா.

நாகர்ஜூனுடன், இதயத்தை திருடாதே, உதயம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் அவரை காதலித்து மணந்து கொண்டார்.

பல வருடம் சினிமா உலகை விட்டே மறைந்திருந்த அமலா இப்போது பேய்களை ஆராய்ச்சி செய்பவராக ஜீ 5 தொலைக்காட்சியின் இணையத்தொடர் ஒன்றில் நடித்துள்ளார்.

இவருடன் வரலட்சுமி சரத்குமார்,சுனைனா உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

தன் வீட்டில் தோன்றி மறையும் கர்ப்பிணி பெண்ணின் ஆவியுடன் பேசும் டாரட் கார்டு நிபுணராக இவர் இதில் நடித்துள்ளார்.

தொடரின் பெயர் ஹை பிரிஸ்டஸ்

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் இத்தொடர் வெளியிடப்பட்டுள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top