குழந்தை பெற்ற பின்னரும் குத்தாட்டம் போட்ட ஆல்யா மானஸா: வைரலாகும் வீடியோ

’ராஜா ராணி’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்து விட்டார் ஆலியா மானசா என்றால் அது மிகையாகாது

தன்னுடன் நடித்த சஞ்சிவ் கார்த்திக் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஆல்யா மானசாவுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது என்பதும் தன்னுடைய குழந்தையுடன் கூடிய புகைப்படங்களை அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் குழந்தை பெற்று ஒரு சில மாதங்களே ஆகியுள்ள நிலையில் தற்போது ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியது குறித்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் ஆல்யா

நட்பதிகாரம் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’சொல்லு சொல்லு செல்லமா’ என்ற தேவா பாடிய கானா பாடலுக்கு அவர் இந்த குத்தாட்டத்தை போட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு மற்றும் நடனமாக இருந்தாலும் இந்த நடனத்தை ரசிகர்கள் ரசித்துப் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் குழந்தை பெற்ற சில மாதங்களிலேயே இந்த குத்தாட்டம் தேவையா என்றும் ஒருசிலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்துவருகின்றனர்

View this post on Instagram

🥰🥰🥰🎊🎊🎊🎊

A post shared by alya_manasa (@alya_manasa) on