Connect with us

நாளை தொடங்கும் அகில இந்திய ஹாக்கி போட்டி

விளையாட்டு

நாளை தொடங்கும் அகில இந்திய ஹாக்கி போட்டி

93 வது எம்.சி.சி முருகப்பா தங்கக் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.  இந்த போட்டியில் பத்து அணிகள் பங்கேற்கின்றன.

     பத்து அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. ஏ பிரிவில் இந்தியன் ஆயில், இந்திய ராணுவம், பெங்களூரு ஹாக்கி அசோசியேஷன், இந்திய விமானப்படை மற்றும் பஞ்சாப் தேசிய வங்கி அணிகளும்,பி பிரிவில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டுக் கழகம், பஞ்சாப் சிந்து வங்கி, மத்திய செயலகம், இந்திய கடற்படை மற்றும் தமிழ்நாடு ஹாக்கி அணிகள் கலந்து கொள்கின்றன.

நாளை தொடங்கும் அகில இந்திய ஹாக்கி போட்டி

     லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்த போட்டியில் முதல் இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.6 லட்சமும், இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.3,50 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

     ஒட்டுமொத்த போட்டியில் சிறப்பாக ஆடும் வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசும் உயர்தரமான சைக்கிள்களும் பரிசாக வழங்கப்படும். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் எம்.சி.சி, தனஞ்ஜெயதாஸ், சண்முகம் மற்றும் அருண் முருகப்பன் இதனை தெரிவித்தார்.

     ஒவ்வொரு பிரிவிலும் அதிகப் புள்ளிகள் எடுக்கும் இரு அணிகள் செப்டம்பர் 7 ஆம் தேதி நடைபெறும் அரையிறுதிக்கு தகுதிபெறும்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top