Connect with us

அலைகள் ஓய்வதில்லை ரீமேக்கில் கௌதம் கார்த்திக்-கார்த்திகா நாயர்?

பொழுதுபோக்கு

அலைகள் ஓய்வதில்லை ரீமேக்கில் கௌதம் கார்த்திக்-கார்த்திகா நாயர்?

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில் கார்த்திக் மற்றும் ராதா அறிமுகமான திரைப்படம் அலைகள் ஓய்வதில்லை. கடந்த 1981 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும், தமிழ் சினிமாவின் காதல் காவியங்களில் இந்த படமும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அலைகள் ஓய்வதில்லை படத்தை ரீமேக் செய்ய பாரதிராஜா தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் இந்த படத்தை இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது

அலைகள் ஓய்வதில்லை ரீமேக் படத்தில் ஹீரோவாக நடிகர் கார்த்தி கேரக்டரில் அவருடைய மகன் கௌதம் கார்த்திக் நடிக்கவிருப்பதாகவும், ராதாவின் கேரக்டரில் அவருடைய மகள் கார்த்திகா நாயர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

39 வருடங்களுக்கு முன் வெளியான திரைப்படம் ஒன்றின் ரீமேக்கில் அந்த படத்தில் நடித்த நாயகன் நாயகியின் மகன், மகளே ரீமேக்கில் நடிக்க இருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் உண்மையில் தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சியாக இந்த படம் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top