Connect with us

அட்சய திருதியை அன்று கொடிகட்டி பறந்த ஜோதிகா

பொழுதுபோக்கு

அட்சய திருதியை அன்று கொடிகட்டி பறந்த ஜோதிகா

எல்லா விசயத்துக்கும் இப்போ மீம்ஸ் க்ரியேட் செய்வது பேஷனாகிவிட்டது. அரசியல் நிகழ்வுகள் அனைத்துக்கும் மீம்ஸ், சினிமா நிகழ்வுகள் அனைத்துக்கும் மீம்ஸ் என கிண்டல் செய்து அந்த செலிபிரிட்டியை ஒரு வழி ஆக்கி விடுகின்றனர்.

அமைச்சர் செல்லூர் ராஜுவை தெர்மாக்கோல் என்ற ஒன்றை வைத்து இன்று வரை கேலி கிண்டல் செய்து வருகின்றனர். யாராவது தப்பி தவறி ஏதாவது தவறாக பேசிவிட்டால் மீம்ஸ் போட்டு அவரை கிண்டல் செய்து விடுகிறார்கள்.

சில வருடங்களாக அட்சய திருதியை களை கட்டி வருகிறது. நகைக்கடைக்காரர்கள் அட்சய திருதியை அன்று நகை வாங்கினால் மிக விசேஷம் என்று விளம்பரம் செய்கின்றனர். இதை கேட்டு பெண்கள் கூட்டமும் ஆரவாரத்துடன் நகைக்கடைகளுக்கு படை எடுக்கின்றனர்.

கணவர்களின் நிலை சொல்லி மாளாது பர்ஸ் காலியாகிவிட்டதே என அழுது புலம்புவார்கள். இந்த விசயத்தை ஒற்றை வரியில் சொன்னதுதான் கீழ்க்கண்ட மீம்ஸ்.

ஒரு புகைப்படத்தில் மொத்த அட்சய திருதியை நிகழ்வையும் சொல்லி விட்டனர். கடைக்கு அழைத்து செல்லப்படும் மனைவிமார்கள் எல்லா நகைகளையும் எடுப்பதை வைத்து அவர்களை கிண்டல் செய்யும் தொணியில் சந்திரமுகி படத்தில் ஜோதிகா, நகைகளை சந்திரமுகி அறையில் சென்று அணிந்து கொள்ளும் காட்சியை மீம்ஸாக கிரியேட் செய்திருந்தனர்.

சமூக வலைதளங்களில் அதிகம் வைரல் ஆகி இருந்தது இவரது மீம்ஸ்

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top