Connect with us

அஜ்மீர் தர்ஹா வருவதற்கு பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி மறுப்பு

செய்திகள்

அஜ்மீர் தர்ஹா வருவதற்கு பாகிஸ்தானியர்களுக்கு அனுமதி மறுப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் உள்ள தர்காவுக்கு வருகை தருவதற்கு பாகிஸ்தானைச்சேர்ந்த 500 பேருக்கு விசா வழங்க இந்தியா மறுத்துவிட்டது. இதனை பாகிஸ்தான்  மத விவகாரங்கள் துறை மந்திரி பீர் நூர் உல்  ஹக் காத்ரி தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “ பாகிஸ்தானைச் சேர்ந்த 500 பேர், அஜ்மீர் தர்காவில் வழிபட வியாழக்கிழமை செல்ல திட்டமிட்டு இருந்தனர். ஆனால், அவர்களுக்கு இந்திய தூதரகம் விசா வழங்கவில்லை.


இது தொடர்பாக 500 பேருக்கும் தகவல் அனுப்பியுள்ளோம். இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் வருவதற்கு கடந்த ஓராண்டில் 5,600 சீக்கிய பக்தர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், 312 இந்து பக்தர்களுக்கும் விசா வழங்கியுள்ளோம்” என்றார். 

சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் மற்றும் அதை தொடர்ந்த இந்தியப்படைகளின் தாக்குதல் அதை தொடர்ந்து வீரர் அபிநந்தன் பாகிஸ்தான்காரர்களால் சிறைபிடிப்பு போன்ற காரணங்களால் இரு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகின்றனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top