கண்ணியமான அஜீத் ரசிகர்கள் யாராவது இருக்கிங்களா-கஸ்தூரி

சமூக வலைதலங்களில் நடிகை கஸ்தூரி அடிக்கடி ஏதாவது கருத்துக்கள் பகிர்வதும் அதை பலர் எதிர்த்து வருவதும் வாடிக்கையான விசயமாக நடந்து வருகிறது.

கட்சி ரீதியாக சில பகிர்வுகளை பகிரும்போது கட்சிக்காரர்கள் சிலரும் வந்து கஸ்தூரியிடம் சண்டை இடுகின்றனர்.

சமீபத்தில் அப்படியாக அஜீத் ரசிகர்கள் சிலர் தவறுதலான விமர்சனத்தை கஸ்தூரி மீது வைத்து வருகின்றனர். பதில் கொடுக்கும் கஸ்தூரியையும் மோசமான வார்த்தைகளால் வசைபாடுகின்றார்கள்.

கஸ்தூரி திரும்ப பதிலடி கொடுத்தும், அஜீத் ரசிகர்கள் சிலர் மீண்டும் மீண்டும் அவதூறான வார்த்தைகளை கொண்டு பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கு நேற்று பதிலடி கொடுத்துள்ள கஸ்தூரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய் கிரகத்து செயற்கைகோள் பத்தி பதிவு போட்டா, அங்க வந்து கோத்தா கொம்மானு பேசுற கழிசடைகள். இதுங்கல்லாம் ‘தல’ பேரை இழுக்குதுங்கன்னு தெரிஞ்சுதான் ரசிகர் மன்றத்தை எப்போவோ கலைச்சுப்புட்டாரு. #தலமரியாதை#தலையெழுத்து. கண்ணியமான, அறிவுள்ள அஜித் ரசிகர்கள் யாரும் ட்விட்டரில் உள்ளனரா?

இவ்வாறு கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.