அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம்

ஏ.ஆர் முருகதாஸிடம் உதவியாளராக பணியாற்றிய அஜய் ஞானமுத்து சிறந்த கதை சொல்லி. டிமாண்டி காலனி படம் மூலம் அனைவரையும் ஈர்த்தவர் இவர். வீட்டுக்குள்ளேயே மாட்டிக்கொண்ட நண்பர்கள், அவர்களுக்கு பின்னால் ஒரு ஆங்கிலேயனின் ஆன்மா என திகிலில் உறைய வைத்தவர் இவர்.

அடுத்ததாக இவர் இயக்கிய இமைக்கா நொடிகளும் சிறந்த திகில் படம் தான் இருந்தாலும் முந்தைய படத்தில் இருந்த வேகம் இல்லை.

இந்நிலையில் விக்ரமுடன் அடுத்த படத்தில் கமிட் ஆகி உள்ளதாக அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

இந்த படமும் திகில் படமாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.