அஜய் தேவ்கனுடன் ஜோடி சேரும் கீர்த்தி

பிரபல நடிகை கஜோலின் கணவர் அஜய் தேவ்கன்.

அஜய் தேவ்கன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி நடிக்க உள்ளார்.

கீர்த்தி நடிக்கும் முதல் இந்தி படமாக உருவாகவுள்ள இப்படம் இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட உள்ளது. சையத் வேடத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக கீர்த்தி நடிக்கிறார். 

சையத் அப்துல் தலைமையிலான இந்திய அணி கடந்த 1956ம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக்கில் இந்திய கால்பந்து அணி அரையிறுதி வரை சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே நடிகை சாவித்ரி வாழ்க்கை வரலாறாக உருவான நடிகையர் திலகம் படத்தில் சாவித்ரி வேடம் ஏற்று கீர்த்தி நடித்தது வரவேற்பை பெற்றது. அந்த சென்டிமென்ட் கால்பந்து வீரரின் வாழ்க்கை படமாக உருவாகும் இதிலும் ஒர்க்அவுட் ஆகும் என்று பட தரப்பினர் ஆசை வெளிப் படுத்தி உள்ளனர்.