காதல் குறித்து ஐஸ்வர்யா ராஜேஸ் போடும் கண்டிஷன்

தமிழில் திருடன் போலீஸ், அட்டக்கத்தி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ்.

காக்க முட்டை படம் ஐஸ்வர்யா ராஜேசுக்கு நல்லதொரு நடிகை என்ற பெயரை வாங்கி கொடுத்தது. இதில் கதாநாயகி என்பதை விட கதையின் நாயகியாக இரண்டு பையன்களின் அம்மாவாக நடித்திருந்தார். இது போல நடிப்பதற்கு ஆரம்பகாலத்திலேயே நடிகைகள் தயங்குவர் இரண்டு குழந்தையின் அம்மா கேரக்டர் என்றால் யாரும் நடிக்க மாட்டார்கள் ஆனால் ஐஸ்வர்யா ராஜேஸ் இதில் நடித்து பாராட்டும் பெற்றார்.

கனா படத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் தன்னை முன்னனி நடிகையாக நிலைநிறுத்திக்கொண்டார். ஐஸ்வர்யா ராஜேஷ். இவருக்கு நல்ல வேடங்களிலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல படங்கள் வாசலை தேடி வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் அவரது காதலர் பற்றிய கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், “நான் தற்போது சிங்கிளாக தான் இருக்கின்றேன். எனக்கும் காதலுக்கும் ஆகாது. ஏன் என்றால், 12 ஆம் வகுப்பில் எனக்கு வந்த முதல் காதலே தோல்வியில் தான் முடிந்தது.

என்னுடைய தோழியே என் காதலனுடன் சேர்ந்து கொண்டு என்னை ஏமாற்றினாள். சில ஆண்டுகள் கழித்து இன்னொருவரை காதல் செய்தேன் அது சில காரணங்களினால் பிரிய வேண்டியதாகி விட்டது.

நான் ஒருவருடன் காதலில் இருக்கும் போது அந்த காதல் முடந்துவிட கூடாது என்பதில் அதிக கவனம் சொலுத்துவேன். இருப்பினும் என்னுடைய துரதிர்ஷ்டவசம் என் காதல் எல்லாமே தோல்வியில் தான் முடிந்துள்ளது.

இதனால் நான் இப்போது வேலையில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறேன், ஆனால் காதல் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் அவசியமானது. அதனால் நான் எனக்கான காதலருக்காக காத்திருக்கிறேன்” என கூறினார்.