ஐரா பட லேட்டஸ்ட் தகவல்கள்

‘ஐரா’ என்ற படத்தை சர்ஜூன் இயக்கியுள்ளார் இவர் ஏற்கனவே லட்சுமி என்ற குறும்படத்தின் மூலம் சர்ச்சைக்குள்ளானவர். பின்பு வரலட்சுமி நடிப்பில் மனிதர்கள் நடமாடும் இடத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘அறம்’ படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மார்ச் மாதம் 28-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் தலைப்பான ‘ஐரா’ என்பது, இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது என இயக்குநர் சர்ஜுன் தெரிவித்தார். யானையின் நினைவுத்திறன் மிகக் கூர்மையானது. அதிலும் ஐராவதம் யானை சிறப்பு வாய்ந்தது என்பதால், நயன்தாராவின் ஒரு கேரக்டருக்கு இது பொருத்தமாக இருக்கும் எனக் கருதி ‘ஐரா’ எனப் பெயர் வைத்ததாகத் தெரிவித்தார்.

‘ஐரா’ என்ற படத்தைத் தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.