நவீன் இயக்க விஜய் ஆண்டனி நடிக்கும் அக்னி சிறகுகள் படத்தின் பர்ஸ்ட் லுக்

மூடர் கூடம் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் நவீன். இவரின் முதல் படமே காமெடி கலந்து இருந்ததால் நல்லதொரு வெற்றியை அடைந்தது சினிமா விமர்சகர்களால் பாராட்டப்பெற்றது. அலாவுதினீன் அற்புத கேமரா அப்படியே கிடப்பில் உள்ளது. இவர் வசனம் மட்டும் எழுதிய கொளஞ்சி டிரெய்லரை வந்த உடனேயே வசன சர்ச்சையில் சிக்கியது.

இப்போது இவர் விஜய் ஆண்டனியை வைத்து அக்னி சிறகுகள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்துடன் நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இதில் அருண் விஜயும் நடிப்பது ஸ்பெசல்.