அக்னி நட்சத்திரத்தை ஞாபகப்படுத்திய சிவப்பு மஞ்சள் பச்சை டிரெய்லர்

சொல்லாமலே படத்தின் மூலம் வித்தியாசமானதொரு கதையை இயக்கி காட்டி தமிழ் சினிமாவில் இயக்குனராக அவதாரமெடுத்தவர் சசி. ரோஜாக்கூட்டம், 555,பூ, பிச்சைக்காரன் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி ரசிகர்களின் இதயம் தொட்டவர் இவர்.

இவர் இயக்கி வரும் சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தில் சித்தார்த், ட்ராபில் போலீஸ் அதிகாரியாகவும், ஜிவி பிரகாஷ் சாலையில் ரேஸ் விடுபவராகவும் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷும், சித்தார்த்தும் படத்தில் மோதிக்கொள்ளும் காட்சிகளை டிரெய்லரில் பார்க்கும்போது, மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் படக்காட்சிகள் போலவே உள்ளது.

அதில் பிரபுவும் கார்த்திக்கும் இது போலவே மோதி கொள்வார்கள் ஆனால் அது வேறு கதைக்களம் ஆகும்.

இதிலும் அமைந்திருக்கும் காட்சிகள் அந்த படத்தை ஞாபகப்படுத்துவது போல் உள்ளது.