Connect with us

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அசத்திய பும்ரா !!

விளையாட்டு

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அசத்திய பும்ரா !!

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2-வது டெஸ்டில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ரசிகர்களைக் குஷிப்படுத்தினார்.

மிகச் சிறப்பான இந்த ஆட்டத்தில் டேரன் பிராவோ 4 ரன்னில் கேட்ச் ஆனார். அவரை அடுத்து ஷமார் புரூக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இவருக்கு அடுத்தபடியாக ரோஸ்டன் சேசும் ரன் எதுவும் எடுக்காமல் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அசத்திய பும்ரா !!

இந்திய அளவில் ஹாட்ரிக் சாதனை படைத்த 3-வது வீரர் பும்ரா ஆவார்.
இதுகுறித்து பும்ரா கூறுகையில், “இந்த சாதனை பெற எனக்கு உறுதுணையாக இருந்த கேப்டன் விராட் கோலிக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

இதுகுறித்து கோலி கூறுகையில், ‘பும்ராவுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், அவருடைய உழைப்புக்குக் கிடைத்த பரிசு, அவர் மேன்மேலும் சாதிக்க என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.

மேலும் மற்ற கிரிக்கெட் வீரர்கள் பலரும் பும்ராவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

ஹாட்ரிக் பட்டியலுக்கு வரவேற்று முதல் ஹாட்ரிக் சாதனையாளரான ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top