Connect with us

மீண்டும் மலர்ந்த கவின்- சாக்ஷி காதல்..!!

பொழுதுபோக்கு

மீண்டும் மலர்ந்த கவின்- சாக்ஷி காதல்..!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 5 வது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துவிட்டது. இதுவரை 3 போட்டியாளர்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மோகன் வைத்தியா எலிமினேட் செய்யப்பட்ட பிறகு, பிக்பாஸ் வீடு எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.


காலையிலேயே ‘பாட்டுப் பாடவா பார்த்துப் பேசவா’என்ற அந்த டாஸ்கில் சீட்டில் வழங்கப்பட்டுள்ளன வசனம் மற்றும் பாடலை பாடி, போட்டியாளர்களில் ஒருவருக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்தவகையில் கவின் பாடிய பாடல் மற்றும் வசனத்தை சாக்‌ஷிக்கு சமர்ப்பித்தார்.

மீண்டும் மலர்ந்த கவின்- சாக்ஷி காதல்..!!

அதைத் தொடர்ந்து சாக்‌ஷிக்கு கிடைத்த சீட்டில் “சிரித்து வாழ வேண்டும், பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே”  என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. ஆனால் அதன் அர்த்தம் தெரியாத சாக்ஷி மற்றவர்களிடம் பொருள் கேட்டார், அப்போது அனைவரும் விளக்க முயற்சிக்கையில், கவின் முன் வந்து சாக்சிக்கு விளக்கம் கூறினார்.

பாடலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட சாக்ஷி,  அந்தப் பாடலையும், வசனத்தையும் கவினுக்கு சமர்ப்பித்தார். ஒரு வழியாக கவின் சாக்ஷி காதல் மீண்டும் மலரத் துவங்கிவிட்டது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top