Connect with us

ரஜினிக்கு பின்னர் வித்தியாசமான டைட்டிலை பெற்ற சிம்பு படம்

பொழுதுபோக்கு

ரஜினிக்கு பின்னர் வித்தியாசமான டைட்டிலை பெற்ற சிம்பு படம்

பொதுவாக ஒரு படத்தில் நடிக்கும் நடிகர்களின் பெயர்களிலேயே டைட்டில் வைப்பது அபூர்வமாக நடைபெறும் ஒன்று. அன்புள்ள ரஜினிகாந்த், மிஸ்டர் கார்த்திக் போன்ற ஒருசில படங்களே இவ்வாறான டைட்டிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படத்திற்கு ‘சிம்புவின் ‘அதிரடி’ வெங்கட்பிரபுவின் ஆக்‌ஷன்’ என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படம் வரும் 2019ம் ஆண்டு வெளியாகும் என்றும் இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படம் குறித்த விரிவான அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள ‘செக்க சிவந்த வானம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
To Top