Connect with us

மதுக்கடைகளை ஏன் திறக்க அனுமதித்தீர்கள்? ஸ்டாலினுக்கு அதிமுகவினர் கேள்வி

செய்திகள்

மதுக்கடைகளை ஏன் திறக்க அனுமதித்தீர்கள்? ஸ்டாலினுக்கு அதிமுகவினர் கேள்வி

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது தெரிந்ததே. ஆனால் அதே முக ஸ்டாலின் அவர்கள் இன்று திமுக-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்யும் புதுவையில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட போது எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை

இந்த நிலையில் புதுவையில் உள்ள அதிமுகவினர் மதுக்கடைகளை திறக்க ஏன் அனுமதித்தீர்கள் என்று ஸ்டாலினுக்கு எதிராக கேள்வி எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அரசியலுக்காக மட்டுமே திராவிட கட்சிகள் மதுக்கடைகளை எதிர்த்து வருவதாகவும் உண்மையில் இந்த இரு திராவிட கட்சிகளும் மதுவை ஒழிக்க விரும்பவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

Continue Reading
To Top