ஆடிக்கிருத்திகை வழிபாடு நடக்க இதுவே காரணம்?!

c79ab2ad305140df3ff80e248ff06201-1

குறிஞ்சி நிலத்தலைவனும், தமிழ் கடவுளுமான முருகனுக்கு வழிபாடு நடத்த பல  நாட்கள் இருந்தாலும், அவற்றில் ஆடிக்கிருத்திகை மிக முக்கியமானது. ஆடி மாதத்தில்தான் தேவர்களின் மாலைப்பொழுதான தட்சிணாயன காலம் தொடங்குகின்றது. இந்த தட்சிணாயன காலத்தில் செய்யப்படும் வழிபாடுகளுக்கு மிகுந்த பலன் உண்டு.  அதனால்தான், ஆடிமாதம் தொடங்கினாலே சக்தி வழிபாடு, வினாயகர் சதுர்த்தி, புரட்டாசி ஏகாதசி, நவராத்திரி, கார்த்திகை தீபம்.. என வரிசையாய் அனைத்து தெய்வ வழிபாடுகளும் நடக்கும். அந்த வரிசையில் முருகனுக்கு ஆடிக்கிருத்திகை கொண்டாடப்படுது.

98a48965ca5b12da632b91b5dceb2008

மாதந்தோறும் கிருத்திகை நட்சத்திரம் வரும். அன்றைய தினம் முருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கும். அனைத்து கிருத்திகைகளில் விரதமிருக்க முடியாதவர்கள் வருடத்தில் தை, ஆடி, கார்த்திகை என மூன்று கிருத்திகை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருகனை வழிபடுவர். ஆடிக்கிருத்திகையில் தொடங்கி தைக்கிருத்திகை வரை அனைத்து கிருத்திகையிலும் விரதமிருந்து முருகனை  வழிபடுவதால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.
 
சிவனிடம் வரங்கள் வாங்கி, அதனால் உண்டான மமதையால் தேவர்களை சிறைப்பிடித்து, மக்களை கொடுமைப்படுத்திய சூரனை வதைக்க வேண்டி ஈசனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளை கங்கை தாங்கி, வாயுபகவானின் துணையோடு சரவணப்பொய்கையில் கொண்டுப்போய் சேர்த்தாள். ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாய் அவதரித்தன.
bb731acf701969fd025573b55213ecba

சரவணப்பொய்கையில் மிதந்த ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு, ஆறு கார்த்திகை பெண்களிடம் கொடுக்கப்பட்டது. கார்த்திகைப் பெண்களும் குமாரர்களை பாலூட்டி போற்றி வளர்த்தார்கள். ஒருநாள் அம்மையும், அப்பனும் தங்கள் பிள்ளையை காண வந்தனர். ஓடோடி வந்த பிள்ளைகள் அறுவரையும் அன்னை சேர்த்தணைக்க ஆறுமுகமும், பன்னிரு கையும் உடைய குழந்தையாய் முருகன் மாறினான்.

26d5b564abeea0e4e781093ab18f2985

கார்த்திகைப்பெண்களின் சேவையினை பாராட்டி அவர்களை நட்சத்திர பட்டியலில் சேர்ப்பித்தோடு, கார்த்திகை நட்சத்திர நாளில் விரதமிருந்து முருகனை வழிப்படுவோருக்கு முருகனின் அருளும், முக்தியும் பரிபூரணமாய் கிட்டுமென அன்னை அருளியதோடு அன்றிலிருந்து முருகன், கார்த்திகேயன் எனவும் அழைக்கப்படுவான் எனவும் சொன்னாள். இதுதான் கிருத்திகை அல்லது கார்த்திகை விரதம் உருவான கதை. ‘ஆறுமுக உருவாய்த் தோன்றி அருளொடு சரவணத்தின் வெறிகமழ் கமலப்போதில் வீற்றிருந்து அருளினானே’ என்று கந்த புராணம் சிறப்பித்துக் கூறுமளவிற்கு  கிருத்திகை விரதம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இப்படிதான் கிருத்திகை விரதம் உண்டானது. கிருத்திகை நட்சத்திரத்தில் விரதமிருந்து முருகனை வழிபட்டு வந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும்…

முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.