பிரியா வாரியரின் வருத்தம்

பிரியா வாரியர் கண் சிமிட்டல் புருவ அசைவு காட்சிகள் பிரபலமானதால் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி தயாரிப்பாளர் வற்புறுத்தியதால் கதையை மாற்றி பிரியா வாரியரை கதாநாயகி ஆக்கினேன் என்று படத்தின் இயக்குனர் உமர் லூலூ தெரிவித்தார். பிரியா வாரியரை விட இரண்டாவது கதாநாயகியாக நடித்த நுரின் ஷெரிப் திறமையான நடிகை என்றும் கூறியிருந்தார்.

கண்ணடித்த டிரெய்லர் பிரபலமானதால் கதாநாயகியாக தேர்வு செய்த என்னை ஓரம் கட்டி பிரியா வாரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டனர். இது எனக்கு வருத்தமாக இருந்தது என்று நூரின் ஷெரிப் கூறினார். இதனால் ரசிகர்களும் பிரியா வாரியரை சமூக வலைத்தளத்தில் விமர்சிக்க ஆரம்பித்தனர்.

எல்லோரும் என்னை விமர்சித்து அவதூறு பரப்புவதற்கு இன்ஸ்டாகிராமில் பதில் அளித்துள்ள பிரியா வாரியர், “நான் உண்மையை பேச ஆரம்பித்தால் சிலர் பிரச்சினையில் சிக்குவார்கள். அவர்களை போல் நானும் இருக்க கூடாது என்று அமைதி காத்து வருகிறேன். அவர்களை கர்மா கவனித்துக்கொள்ளும்” என்று கூறியுள்ளார்.