பழம்பெரும் பெண் இயக்குனரும் நடிகையுமான விஜயநிர்மலா மரணம்

பழம்பெரும் தமிழ் சினிமா நடிகை விஜயநிர்மலா தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவை 1977ல் மணம் முடித்தார். தெலுங்கில் இவர் 44 படங்களை இயக்கியுள்ளார். 73 வயதான விஜயநிர்மலா உடல்நலக்குறைவால் காலமானார்.

413c9fd9e006d65c5cf7a0e00c0de9e5

தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட 200 படங்களில் இவர் நடித்துள்ளார். சிவாஜி கணேசனை இவர் இயக்கியுள்ளார். தமிழில் சிவாஜியை வைத்து இயக்கிய பெண் இயக்குனர் இவரும் சாவித்ரியும் மட்டுமே.இவர் அறிமுகமான முதல் படம் மச்ச ரேகை, பணமா பாசமா, என் அண்ணன், சித்தி, ஞானஒளி உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

நாகேஷ் கதாநாயகனாக நடித்த சோப்பு சீப்பு கண்ணாடி படத்தில் இவர்தான் கதாநாயகி.

44 படங்களை இயக்கிய பெண் இயக்குனர் என்பதால் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.