Connect with us

ஸ்ரீதேவி வழக்கை முடித்து வைத்த துபாய் காவல்துறை: இரவு மும்பை வருகிறது உடல்

பொழுதுபோக்கு

ஸ்ரீதேவி வழக்கை முடித்து வைத்த துபாய் காவல்துறை: இரவு மும்பை வருகிறது உடல்

ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும், இதுவொரு எதிர்பாராத தற்செயலான நிகழ்வால் நடந்த மரணம் என்று துபாய் காவல்துறை அவரது வழக்கை முடித்துவைத்துவிட்டதால் ஸ்ரீதேவியின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதனையடுத்து ஸ்ரீதேவியின் உடல் இன்று எம்பார்மிங் செய்யப்பட்டு அனில் அம்பானியின் தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்படுகிறது. அனேகமாக இன்றிரவு ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

முதலில் மும்பையில் உள்ள ஸ்ரீதேவி இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் விஐபிக்கள் அஞ்சலிக்காக சில மணி நேரம் வைக்கப்படவுள்ளது. இதனையடுத்து ஸ்ரீதேவியின் இல்லம் அருகே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மும்பை காவல்துறை செய்துள்ளது.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top