Connect with us

நடிகை குஷ்புவின் உறவினர் கொரோனாவால் பலி… அவரே வெளியிட்ட தகவல்!!

பொழுதுபோக்கு

நடிகை குஷ்புவின் உறவினர் கொரோனாவால் பலி… அவரே வெளியிட்ட தகவல்!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பானது ஒருநாளைக்கு 8000 என்ற எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றது. அதிலும் கொரோனா பாதிப்பானது மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற 5 மாநிலங்களில் தலைவிரித்தாடுகிறது. மொத்தமாக எடுத்துக் கொண்டால் 11 நகரங்கள் பெரிய அளவில் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது.

அந்த வகையில் நாட்டிலேயே அதிக அளவு கொரோனா பாதித்தோரைக் கொண்டு முதல் இடத்தில் மகாராஷ்டிரா தொடர்ந்து நீடித்து வருகிறது, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையானது நாட்டில் பாதி அளவாக உள்ளது.

நடிகை குஷ்புவின் உறவினர் கொரோனாவால் பலி… அவரே வெளியிட்ட தகவல்!!

மகாராஷ்டிராவில் கொரோனாவினைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் திணறி வருகின்றது. இந்தநிலையில் மகாராஷ்டிராவில் உயிர் இழப்பு 2000 ஐத் தாண்டிய நிலையில், நடிகை குஷ்புவின் நெருங்கிய உறவினர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நடிகை குஷ்புவும் இதுகுறித்த உண்மைத் தகவலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் நெருங்கிய உறவினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 2 வாரங்கள் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று உயிர் இழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continue Reading
To Top