எஸ் வி சேகரின் அனுமதியால் நடிகர் சங்க தேர்தல் நடத்துவதில் குழப்பம்

நடிகர் சங்க தேர்தல் வரும் 23 ம்தேதி ஞாயிறன்று நடைபெறுகிறது.இந்த தேர்தலின் வாக்குப்பதிவு சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு நாசரும், சுவாமி சங்கரதாஸ் அணி சார்பாக இயக்குனர் பாக்யராஜும் போட்டி இடுகின்றனர்.

வாக்குப்பதிவு நடக்க இருக்கும் நிலையில் எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் எப்படி வாக்குப்பதிவு நடக்கும் அன்றைய தினம் என்னுடைய நாடகம் அங்கு நடத்துவதற்கு முறைப்படி அனுமதி வாங்கியுள்ளேன் என கூறியுள்ளதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் எப்படி இரண்டு அனுமதி கொடுத்தார்கள் எனவும் குழப்பம் நீடிக்கிறது.

எஸ்.வி சேகர் நடத்த இருக்கும் நாடகத்தின் பெயர் ஹல்வா என்பது கூடுதல் தகவல்.