நடிகர் வடிவேலுவுக்கு இயக்குனர் சுசீந்திரன் கண்டனம்

இருப்பத்து மூன்றாம் புலிகேசி பாகம் இரண்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருடன் வடிவேலுக்கு ஏற்பட்ட பனிப்போரால் அப்படியே நிற்கிறது. இந்நிலையில் தனியார் இணையத்துக்கு வடிவேலு அளித்த பேட்டியில் சிம்புதேவன் வேலை தெரியாதவர் அவன் இவன் என்றும் வடிவேலு பேசியதாக தெரிகிறது.

இதற்கு இயக்குனர் நவீன் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் இயக்குனர் சுசீந்திரனும் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

அவன் இவன் என்ற வார்த்தையை வடிவேலு எப்படி பயன்படுத்தலாம் என கேட்டுள்ளார் . சிம்புதேவன் இயக்கிய இம்சை அரசன் படம்தான் அவருக்கு வெற்றியை கொடுத்தது அதற்கு பிறகு அவர் நாயகனாக நடித்த எலி, தெனாலிராமன் போன்றவை படு தோல்வி அடைந்ததை அவர் நினைத்து பார்க்க வேண்டும்.

ஒரு இயக்குனர் என்ற முறையில் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என சுசீந்திரன் கூறியுள்ளார்.