உங்க குடும்பத்தில இருந்து என்னை விலக்கிடுங்க: பிரதமர் மோடிக்கு கருணாகரன் வேண்டுகோள்

உங்க குடும்பத்தில இருந்து என்னை விலக்கிடுங்க: பிரதமர் மோடிக்கு கருணாகரன் வேண்டுகோள்

என்னையும் எனது குடும்பத்தினர்களையும் உங்கள் குடும்பத்தில் இருந்து விலக்கிவிடுங்கள் என நகைச்சுவை நடிகர் கருணாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே தமிழக மக்கள் பிரதமர் மோடி மற்றும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடி அங்கு பேசியபோது, ‘இந்தியாவில் வாழும் 125 கோடி மக்களும் எனது குடும்பமே என்று கூறினார்.

இதற்கு தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்த கருணாகரன், தயவு செய்து என்னையும், என் குடும்பத்தையும் விட்டுவிடுங்கள், மன்னிக்கவும் என்று பதிவு செய்துள்ளார். கருணாகரனின் இந்த பதிவிற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் அதே நேரத்தில் நெட்டிசன்களிடம் இருந்து வரவேற்பும் கிடைத்து வருகிறது.