கார்த்திக் குறித்து கருணாஸ்

நடிகர் கருணாஸ் தனது முக்குலத்தோர் புலிப்படை சார்பாக சீட் கேட்க போய் முன்னாள் முதல்வர் மறைந்த செல்வி ஜெயலலிதா அவர்கள், தங்கள் கட்சியின் இரட்டை இலை சின்னத்தில் திருவாடானை தொகுதிக்கு கொடுத்து வெற்றி பெற செய்தார்.

ஜெ வின் மறைவுக்கு பிறகு அதிமுகவினருக்கும் இவருக்கும் ஏழாம் பொருத்தமானது. தற்போது உள்ள அதிமுகவினரும் சரி இவரும் சரி தொடர்ந்து மோதல் போக்கையே கடை பிடித்து வருகின்றனர்.

அமமுகவிலும் இவர் இணையவில்லை.

இந்நிலையில் அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்திருக்கும் நடிகர் கார்த்திக் பற்றி கருணாஸ் கூறியது.

அரசியலில் அவர் எப்படி இருந்திருக்கிறார். ஒவ்வொரு கால கட்டத்திலேயும் அரசியலில் என்ன மாதிரி ஸ்டேண்ட் எடுத்திருக்கிறார் என்பது தெரியும். தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு கட்சியும் அவரை பயன்படுத்துவது போலத்தான் அதிமுகவும் இப்போது பயன்படுத்துகிறது. . இது திருவிழா நேரத்தில் நடக்கும் கூத்து. திருவிழாவில் கடை போடுவதற்கு எப்படி போட்டி ஏற்படுமோ அப்படி தான் இது.

இவ்வாறு கருணாஸ் கூறி இருக்கிறார்.