Connect with us

நடிகர் கார்த்தி பிறந்த நாள்

பொழுதுபோக்கு

நடிகர் கார்த்தி பிறந்த நாள்

கோவை மாவட்டத்தின் ஒரு ஜாம்பவான் நடிகர் கவுண்டமணி அவரைப்போலவே கோவை மாவட்டத்தின் மிகப்பெரும் சினிமா செலிப்ரிட்டி நடிகர் கார்த்தி ஆவார். சிவக்குமாரின் மகனான கார்த்தி சூர்யா நடிக்க வந்து பல வருடங்களுக்கு பிறகே நடிக்க வந்தார். மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்களில் இயக்குனர் மணிரத்னத்திடம் அசிஸ்டெண்டாக இருந்தவர் இவர்.

அமீரின் பருத்திவீரன் படத்தில் 2007ல் அறிமுகமானார் 25 படங்களை நெருங்கி நடித்து வருகிறார் கார்த்தி.

க்யூட்டான் ஜாலியான நடிகர் என பெயரெடுத்தவர் கார்த்தி. பெண் சினிமா ரசிகைகள் இவருக்கு ஏராளம். அந்த அளவு ஜாலியாக க்யூட்டாக நடிப்பவர் கார்த்தி.

முதல் படமான பருத்திவீரனே தேசிய விருது பெற்றது. கமர்சியல் படமாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

கார்த்தி நடித்த படங்களில், பருத்தி வீரன், கொம்பன், சிறுத்தை, மெட்ராஸ் உள்ளிட்ட படங்கள் மிக புகழ்பெற்றவையாகும்.

இன்று பிறந்த நாள் காணும் கார்த்தியை வாழ்த்துவோம்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top