இளையராஜா இசையில் ஆதி நடிக்கும் க்ளாப்

மிருகம் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஆதி. இவர் தமிழில் நடித்து ஒரு சில படங்கள் வெற்றியும் அடைந்துள்ளது. இவர் நடிப்பில் மரகத நாணயம் என்றொரு வெற்றிப்படம் கடைசியாக வந்தது. சமீபத்தில் சில நாட்களுக்கு முன் வந்த கன்னட ரீமேக்கான யு டர்ன் திரைப்படம் பெரிதாக பேசப்படவில்லை.

இப்போது ஆதி க்ளாப் என்ற படத்தில் நடிக்கிறார் . விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழரசன் போன்ற படங்களுக்கு இசையமைக்கும் இசைஞானி இளையராஜா இப்படத்துக்கும் இசையமைக்கிறார்.

இது விளையாட்டை மையமாக கொண்ட படமாம். இதை இயக்குவது பிரித்வி ஆதித்யா என்ற இயக்குனர். தமிழ் தெலுங்கு இரு மொழிகளில் இப்படம் வருகிறது.

அகன்சா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.