மன்னிப்புக் கேட்ட அபிராமி.. திமிரு காட்டிய முகின்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது, வனிதா வெளியேறிய பின் பிக் பாஸ் டிஆர்பி படு சரிவினைச் சந்தித்தது.

இதனை ஈடுகட்டவே வீட்டிற்குள் நுழைந்தார் வனிதா. வனிதா வந்ததும் போதும் டிஆர்பி எக்குத் தப்பாக எகிறியது.

வனிதா இப்போதைக்கு டார்கெட் செய்திருப்பது முகினைத் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மன்னிப்புக் கேட்ட அபிராமி.. திமிரு காட்டிய முகின்!!

அபிராமியைத் தொடர்ந்து அனைவரும் முகினைப் பற்றிய உண்மைகளை முன்வைத்தனர், ஆனால் அதனை சற்றும் யோசித்துப் பார்க்காத முகின் கோபப்படவே செய்தார்.

ஒரு நிலைக்கு மேல் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அபிராமியை நோக்கி குரலை உயர்த்திப் பேசினார் முகின். பின்னர் முன் கோபக்காரரான அவர் நாற்காலியை தூக்கி அடிக்க சென்றார்.

அதற்குள் அனைவரும் தடுத்துவிட்டனர். இறுதியில் இருவரும் அழத் தொடங்கிவிட்டனர். முகினை சேரன், கவின், சாண்டி, வனிதா ஆகியோர் சமாதானப்படுத்தினர். அபிராமியை ஷெரீனும் லோஸ்லியாவும் சமாதானம் செய்து கொண்டிருந்தனர்.


இவையெல்லாம் ஓய்ந்த பின் சந்திப்புக் கூடத்தில் அமர்ந்திருந்த முகினிடம் எடுத்துக் கூறி சாரி சொன்னார் அபிராமி. ஆனால் தவறினை கொஞ்சம் கூட உணராமல், தான் செய்தது சரியே என்பதுபோல, திமிராக உட்கார்ந்திருந்தார் முகின், இறுதியில் அபிராமி பேசி முடிக்கையில் தலையை மட்டும் ஆட்டினார்.