Connect with us

வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்: பொதுமக்கள் அதிர்ச்சி

செய்திகள்

வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்: பொதுமக்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலத்தில் வானில் இருந்து மர்மப் பொருள் ஒன்றால் அம்மாநில மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது

ராஜஸ்தான் மாநிலம் சஞ்சோர் என்ற பகுதியில் திடீரென ஒரு விண்கல் போன்ற பொருள் ஒன்று வானில் இருந்து விழுந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒரு வெடிகுண்டு வெடித்தால் எப்படி இருக்குமோ அதுபோல் பலத்த சத்தத்துடன் அந்த பொருள் விழுந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து உடனடியாக போலீசார் மற்றும் உயரதிகாரிகள் அந்த பொருள் விழுந்த இடத்திற்கு விரைந்தனர். அந்த பொருள் விழுந்த இடத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டதாகவும், விழுந்தபோது எழுந்த சத்தம் 2கிமீ சுற்றளவிற்கு கேட்டதாகவும் ஊர்மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த பொருள் விழுந்தது முதல் வெப்பமாக இருந்ததை அறிந்த காவல்துறையினர் வெப்பம் தணியும் வரை காத்திருந்து அதன்பின் அந்த பொருளை எடுத்துச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுமார் 2.78 கிலோ எடை கொண்ட அந்த பொருள் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் தடயவியல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த பொருள் குறித்து உள்ளூரில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டதில் அந்த பொருளில் ஜெர்மானியம், பிளாட்டினியம், நிக்கல் மற்றும் இரும்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அடுத்தக்கட்ட சோதனைக்காக அந்த பொருளை ஜெய்பூரில் உள்ள புவியியல் தொடர்பான ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Continue Reading
To Top