Connect with us

கோழிகளுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? திடுக்கிடும் தகவல்

செய்திகள்

கோழிகளுக்கும் பரவியதா கொரோனா வைரஸ்? திடுக்கிடும் தகவல்

தமிழகம் மட்டுமின்றி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி மனித இனத்தையே ஆட்டுவித்து வருகிறது என்பதும், இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எந்தவிதமான மருந்துகளும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் பல நாடுகள் கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்க முயற்சியில் ஈடுபட்டு அதற்காக கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மனிதர்களுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் விலங்குகளுக்கும் பரவியுள்ளதாக ஒரு சில செய்திகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமெரிக்காவில் உள்ள இரண்டு சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் கோழிகளுக்கும் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக சமூக வலைத்தளத்தில் ஒரு வதந்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. ஆனால் இந்த செய்தி அடிப்படையற்றது என்று அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது

கோழி இறைச்சியை உணவாகக் கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது என்றும் கோழி இறைச்சியை சாப்பிடுவதால் கொரோனா வைரஸ் பரவும் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்றும் இது குறித்த வதந்தி பரப்பியவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய பிரதேச மாநில கால்நடைத்துறை அறிவித்துள்ளது.

ஏற்கனவே கோழிக்கறி சாப்பிட்டால் கொரோனா வைரஸ் பரவும் என்ற வதந்தி கடந்த சில மாதங்களுக்கு முன் பரவியதால் கோழி கறி விற்பனை அதளபாதாளத்திற்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது

Continue Reading
To Top