Connect with us

சிப்ஸ் வாங்கிய நபரிடம் காசு கேட்டதால் ஒரு கொலை: சென்னையில் பரபரப்பு

செய்திகள்

சிப்ஸ் வாங்கிய நபரிடம் காசு கேட்டதால் ஒரு கொலை: சென்னையில் பரபரப்பு

சென்னையைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். இவருடைய கடைகள் சுமன் என்பவர் குடிபோதையில் சிப்ஸ் பாக்கெட் வாங்க வந்தார். சிப்ஸ் பாக்கெட் வாங்கியவுடன் சுமன் காசு கொடுக்காமல் இருந்துள்ளார். அப்போதுதான் சிப்ஸ் பாக்கெட்டுக்கு பணம் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

இந்த நிலையில் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு வந்த சுமன், பயங்கர ஆயுதங்களால் தங்கராஜை தாக்கி உள்ளார் இதில் படுகாயமடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமன் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து விசாரணை செய்து கொண்டிருக்கின்றனர். ஒரே ஒரு சிப்ஸ் பாக்கெட்டிற்கு காசு கொடுக்கும் தகராறில் ஒரு உயிர் உயிரிழக்க பட்டதும் 6 பேர் சிறைச்சாலையில் இருப்பதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Continue Reading

அதிகம் படித்தவை

To Top