நடிகை தமன்னாவை கைது செய்ய நீதிமன்றத்தில் வழக்கு: அதிர்ச்சி தகவல்

நடிகை தமன்னா, கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஆகியோர்களை கைது செய்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களால் ஏராளமான இளைஞர்கள் தங்களுடைய பணத்தை இழந்து வருகின்றார்கள் என்றும் ஒரு சிலர் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது

சமீபத்தில் கூட சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவர் பகுதி நேர வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது, வேலை செய்த நிறுவனத்தின் பணத்தை எடுத்து ஆன்லைனில் விளையாடி அதில் பணம் தோற்றதால் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் பெரும் சர்ச்சைக்குள்ளானது

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்த நடிகை தமன்னா, விராட் கோலி ஆகியோர்களை கைது செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரகாசம் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்
இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி விசாரணை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

பிரபல நடிகை தமன்னாவை கைது செய்ய வேண்டும் என்று தொடுக்கப்பட்டுள்ள வழக்கை பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது