Connect with us

சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம்: சல்மான்கான் உள்பட 8 பேர் மீது வழக்கு

பொழுதுபோக்கு

சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம்: சல்மான்கான் உள்பட 8 பேர் மீது வழக்கு

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஞாயிறன்று திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரையுலகையே உலுக்கியது. ஆனால் அவருடைய தற்கொலைக்கே பாலிவுட் திரையுலகினர்தான் காரணம் என தற்போது வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பாலிவுட் திரையுலகின் முன்னணி கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளுடன் சுஷாந்த்சிங் உடன் நடிப்பதை தவிர்த்து வந்ததாகவும், குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு சுஷாந்த்சிங் வளர்ந்ததால் ஏற்பட்ட பொறாமையின் காரணமாகவே அவர்கள் இவ்வாறு செய்ததாகவும் கூறப்பட்டது

இதுகுறித்து சுஷாந்த்சிங் ரசிகர்களும் சமூக வலைதளங்கள் மூலம் குற்றஞ்சாட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் திரையுலகமே தன்னை ஒதுக்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை விவகாரம் தொடர்பாக சல்மான் கான், கரன் ஜோஹர் உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் என்பவர் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

பாலிவுட் படங்களில் இருந்து சுஷாந்தை நீக்கி அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு தள்ளியிருப்பதாக சுதிர் தனது புகாரில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

Continue Reading
To Top