இந்தியன் 2’ தயாரிப்பு நிறுவனம் மீது புகார் கொடுத்த ஷங்கரின் உதவியாளர்

இந்தியன் 2’ படப்பிடிப்பின்போது நடந்த விபத்து குறித்து லைகா நிறுவனத்தின் புரொடக்ஷன் மேனேஜர் மற்றும் கிரேன் உரிமையாளர் ஆகியோர் மீது ஷங்கரிடம் இணை இயக்குனராக பணிபுரிந்து வரும் குமார் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு 4 பிரிவுகளில் லைகா நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்

இந்தியன் 2’ படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் பெரும் பொருள் உதவி செய்து உதவிகளை லைகா நிறுவனம் செய்து வரும் நிலையில் ஷங்கரின் இணை இயக்குநர் லைகா மீதே காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது