Connect with us

90 ரூபாய்க்கு வாங்கி ரூ.4.5 கோடிக்கு விற்பனையான பொருள்: இளம்பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்

செய்திகள்

90 ரூபாய்க்கு வாங்கி ரூ.4.5 கோடிக்கு விற்பனையான பொருள்: இளம்பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்

சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குவளை ஒன்றை ஆன்லைன் மூலம் 90 ரூபாய்க்கு வாங்கி, அதன்பின் அந்த குவளையை அதே ஆன்லையில் சுமார் ரூ.4.5 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

சீனாவில் கடந்த 1735 முதல் 1796 வரை ஆட்சி செய்த Qianlong என்ற மன்னர் பயன்படுத்திய குவளை ஒன்று தற்செயலாக ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த குவளையின் பழமை தெரியாமல் ஒரு நபர் இதனை வெறும் 90 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்த குவளையை இளம்பெண் ஒருவர் வாங்கிய பின்னர்தான் அது மன்னர் காலத்தில் பயன்படுத்தபப்ட்ட பழமையான குவளை என்பது தெரிய வந்தது

இதனையடுத்து அந்த குவளையை வாங்க பலர் போட்டி போட்டனர். அதன்பின்னர் நடந்த ஏலம் ஒன்றில் இந்த குவளை இந்திய மதிப்பில் ரூ.4.42 கோடிக்கு ஏலம் போனது. இந்த பணத்தை தனது மகளின் எதிர்காலத்திற்காக செலவு செய்யப்போவதாக அந்த இளம்பெண் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top