90 எம்.எல் இரட்டை அர்த்த வசனம் பேசியது சரியா-ஓவியா

ஓவியா 90 எம் எல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஓவியா படு பயங்கரமாக ஆபாச வசனம் பேசியதாக இந்த படத்தின் டீசரை பார்த்த பலர் புகார் தெரிவித்தனர். பெண்கள் பேசும் வசனமே இது இல்லை என்றும் பேசி இருந்தனர்.

இப்படத்தை இயக்குபவர் ஏற்கனவே குளிர் 100 என்ற திரைப்படத்தை இயக்கிய அனிதா உதீப் என்ற பெண் இயக்குனர் ஆவார். இந்த படத்துக்காக இவர் அழகிய அசுரா என்று பெயரை மாற்றி வைத்துள்ளார்.

இந்நிலையில் இரட்டை அர்த்த வசனம் ஆபாசமாக பேசி நடித்தது பற்றி ஓவியா கூறியது

ஆபாசம் என்று எதை கூறுகிறீர்கள்? பெண்கள் என்றாலே அழுது கொண்டு சோக வசனம் பேசி நடிக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா? நான் நிர்வாணமாக நடிக்கவில்லை. கற்பழிக்கும் காட்சியில் நடிக்கவில்லை. ரசிகர்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அதை கொடுப்பது என் கடமை. உடை அணிவது பெண்களின் சுதந்திரம். அவரவர் விருப்பப்படி உடை அணிவதற்கு உரிமை இருக்கிறது. அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.


இது, ஆணாதிக்கத்துக்கு எதிரான படம். கதைக்கும், கதாபாத்திரத்துக்கும் ஏற்ப நடிப்பதில் தப்பு இல்லை. படத்தில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரம் என்ன கேட்டதோ, அதைத்தான் செய்து இருக்கிறேன். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. சினிமா தியேட்டர்களில் புகை பிடித்தால் என்ன வரும்? என்பதை பார்த்ததில் இருந்து புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன். ரசிகர்கள் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்பை ‘90 எம்.எல்.’ படத்தில் ஓரளவு நிறைவேற்றி விட்டேன். படத்தில் நான் கவர்ச்சியாக நடித்து இருக்கிறேன். ஆபாசமாக நடிக்கவில்லை.