84 தமிழர்களிடம் கோயிலில் சத்தியம் வாங்கிய ஆந்திர போலீஸ்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக குற்றம் சாட்டப்பட்டு 84 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் இரு மாநிலங்களுக்கு இடையே பதட்ட நிலை உருவானது. இதனையடுத்து 84 தமிழர்களையும் ஒருசில நிபந்தனைகளுடன் விடுவிக்க ஆந்திர போலீஸ் உத்தரவிட்டது.

இதன்படி செம்மரம் வெட்ட மீண்டும் ஆந்திராவுக்கு வரமாட்டோம் என்றும், தேவைப்பட்டால் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரத்தயார் என்றும் பிரமாணபத்திரத்தில் 84 தமிழர்களும் கையெழுத்திட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதன்பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து ஆந்திராவில் கைதாகி விடுவிக்கப்பட்ட 84 தமிழர்களில் முதற்கட்டமாக 43 பேரை தமிழக அரசு பேருந்தில் அவர்களது சொந்த ஊர்களுக்கு ஆந்திரா போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ஆந்திராவில் கைதாகி விடுவிக்கப்பட்ட 84 தமிழர்களும் செம்மரம் வெட்ட மீண்டும் ஆந்திராவுக்கு வரமாட்டோம் என கபிலீஸ்வரர் கோயில் முன் சத்தியம் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.