நகராட்சி தோண்டிய குழியில் விழுந்து 8 வயது சிறுவன் பலி: வாணியம்பாடியில் பரபரப்பு

ஆழ்துளை கிணறு உள்பட பல குழிகளில் விழுந்து சிறுவர் சிறுமியர்கள் உயிரிழந்து வருவது தமிழகத்திலும் இந்தியாவிலும் வாடிக்கையாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாணியம்பாடியில் நகராட்சி சார்பில் தோண்டப்பட்ட குழி ஒன்றினுள் 8வயது சிறுவன் விழுந்து உயிரிழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வாணியம்பாடியில் நகராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குடிநீர் பணிக்காக குழி தோண்டப்பட்டது. இந்த குழியின் அருகே 8 வயது சிறுவன் ஒருவன் பலூன் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத வகையில் அந்த சிறுவன் குழிக்குள் விழுந்ததாகவும், குழியில் ஏழு அடி வரை தண்ணீர் இருந்தால் அந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பலியானதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் காவல் துறையினர் விரைந்து வந்து சிறுவனை பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நகராட்சி சார்பில் தோண்டிய குழியில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளது வாணியம்பாடி நகரையே சோகத்திற்கு உள்ளாகியுள்ளது