வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கே 75% முன்னுரிமை – ஜெகன்மோகன் ரெட்டி!

ஆந்திர மாநிலத்தின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றதில் இருந்து, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறார். அந்த வகையில் நிறுவனங்கள்/தொழிற்சாலைகள் சட்டம் 2019 ஆந்திர சட்டமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டது. 

அதன்படி, அம்மாநிலத்தின் 75% தனியார் வேலைவாய்ப்புகள் உள்ளூர் மக்களுக்கே அளிக்கப்படும்.

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வேலைவாய்ப்புகளில் உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று போராடி வருகின்றன.

வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கே 75% முன்னுரிமை - ஜெகன்மோகன் ரெட்டி!

கடந்த 9ஆம் தேதி, தனியார் வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 70% உள்ளூர் மக்களுக்கே ஒதுக்கப்படும் என்ற சட்டத்தை மத்தியப் பிரதேசம் கொண்டு வந்தது. 

இதுபோன்ற கோரிக்கை கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் ஒலித்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தின் படி, போதிய திறன்களுடன் உள்ளூர் மக்கள் இல்லையெனில், அவர்களுக்கு நிறுவனங்கள் உரிய பயிற்சி அளித்து வேலைக்கு எடுத்து கொள்ள வேண்டும். 

இதன்மூலம் திறனற்ற நபர்கள் யாரும் இல்லை என்று எந்தவொரு நிறுவனமும் கூற முடியாது என்று தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர்.